கெப் - லொறி விபத்தில் தாய் பலி; மகன் படுகாயம்

கெப் - லொறி விபத்தில் தாய் பலி; மகன் படுகாயம்-Accident-Mother Killed-Son Injured

எம்பிலிப்பிட்டிய தனமல்வில வீதியில் இடம்பெற்ற விபத்தில் 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவனகல பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இவர்கள் பயணித்த கெப் வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிசார் தெரிவித்தனர்.

கெப் வண்டியில் முன் ஆசனத்தில் பயணித்த ஹம்பேகமுவ அரம்பேகம பகுதியினை சேர்ந்த குறித்த பெண் வைத் தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியை ஓட்டிச் சென்ற நிலையில் படுகாயமடைந்த இறந்த பெண்ணின் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)


Add new comment

Or log in with...