அஜித் ரோஹணவின் இடத்திற்கு புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக SSP நிஹால் தல்துவ

அஜித் ரோஹணவின் இடத்திற்கு புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக SSP நிஹால் தல்துவ-SSP Nihal Thalduwa Appointed as New Police Media Spokesman

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011 முதல் 2021 வரை கடந்த 10 வருடங்களாக 4 தடவைகள் குறித்த பதவியிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவின் இடத்திற்கே அவர் நேற்று முன்தினம் (14) முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது ஊடகத் துறை தொடர்பான பணியில் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அஜித் ரோஹண நன்றி தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...