Thursday, August 12, 2021 - 7:08pm
கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய,
- PCR பரிசோதனை - ரூ. 6,500
- Rapid Antigen Test - ரூ. 2,000
கொவிட்-19 பரவலின் உக்கிரம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு சில வைத்தியசாலைகள் கொவிட்-19 சோதனை தொடர்பில் அதிகளவிலான கட்டணங்களை அறவிடுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
PDF File:
Add new comment