PCR ரூ. 6,500; Rapid Antigen ரூ. 2,000 உச்சபட்ச கட்டணங்கள் நிர்ணயம்

PCR ரூ. 6,500; Rapid Antigen ரூ. 2,000 உச்சபட்ச கட்டணங்கள் நிர்ணயம் -Maximum Charges Fixed for PCR & Rapid Antigen Tests-Gazette on Tomorrow

கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனைக்கு ரூ. 6,500 மற்றும் Rapid Antigen பரிசோதனைக்கு ரூ. 2,000 உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை (12) வெளியிடப்படுமென அவர் அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலின் உக்கிரம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு சில  வைத்தியசாலைகள் கொவிட்-19 சோதனை தொடர்பில் அதிகளவிலான கட்டணங்களை அறவிடுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, PCR பரிசோதனை அவசியமென நினைப்பவர்களுக்கு இன்றையதினம் (11) கொழும்பில் 3 இடங்களில் PCR சோதனைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று (11) முற்பகல் 9.30 மணியிலிருந்து 11.30 மணி வரை கொழும்பு, டீன்ஸ் வீதியிலுள்ள மாநகர அலுவலகம், கெம்பல் பார்க், BMICH ஆகிய இடங்களில் இவ்வாறு PCR சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...