ரிஷாட் பதியுதீனுக்கு ஓகஸ்ட் 18 வரை விளக்கமறியல் விதிப்பு

ரிஷாட் பதியுதீனுக்கு ஓகஸ்ட் 18 வரை விளக்கமறியல் விதிப்பு-MP Rishad Bathiudeen Remanded Till Aug 18

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு எனத் தெரிவித்து, 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று (10) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவை வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் எம்.பி. 100 நாட்களுக்கும் மேலாக CIDயின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...