அவமதிப்பு வழக்கில் சிறுவனுக்கு பிணை கிடைத்ததை அடுத்து கோவில் மீது தாக்குதல்

அவமதிப்பு வழக்கில் சிறுவனுக்கு பிணை கிடைத்ததை அடுத்து கோவில் மீது தாக்குதல்-Pakistan Temple Issue

உள்ளூர் பாடசாலையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போங் நகரத்தில் (60 கிமீ) இலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இந்து ஆலயத்தை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

பிரதி பொலிஸ் ஆணையர் டாக்டர் குராம் ஷெசாத் மற்றும் மாவட்ட பொலிஸ் அதிகாரி அசாத் சர்ப்ராஸ் ஆகியோர் நகரத்திற்கு வருகை தந்த பின்னர் மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது.

தாருல் உலூம் குர்ஆன் பாடசாலையை சேர்ந்த மதகுருவான ஹபீஸ் முஹம்மது இப்ராகிமின் முறைப்பாட்டையடுத்து ஜ பாங் பாங் பொலிஸார் சிறுவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் சிறியவர் மற்றும் மனநலம் குன்றியவர் என்று கூறி சில இந்து பெரியவர்கள் பாடசாலை நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டதாக அறியவருகிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு கீழ் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியபோது, சிலர் நகரத்தில் பொதுமக்களைத் தூண்டிவிட்டு அங்குள்ள அனைத்து கடைகளையும் மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ கிளிப் மற்றும் இரும்புக் கம்பிகளை கையில் வைத்துக்கொண்டு கோவிலுக்குள் புகுந்து அதன் கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள், விளக்குகளை அடித்து நொறுக்குவது மற்றும் மின்விசிறிகளை சேதப்படுத்துவது போன்ற வீடியோ காட்சி வெளியானது.

பின்னர், போராட்டக்காரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எம்-5 நெடுஞ்சாலையை மறித்தனர்.

மாவட்ட பொலிஸ் பேச்சாளர் அகமது நவாஸ் சீமா கூறுகையில், பொலிஸார் பிரச்சினை ஏற்பபட்ட பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவர் என்பதை திரு சீமா உறுதிப்படுத்தினார், மேலும் இதுவரை அவரது மனநலம் குறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்றும் கூறினார்.

அப்பகுதியில் இந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே சில பழைய தகராறு பற்றிய தகவல்கள் உள்ளன, இது அமைதியின்மைக்கான உண்மையான காரணம் என்று கூறப்பட்டது.


Add new comment

Or log in with...