கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசில் - ஸ்பெயின் மோதல்

ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான பிரேசில் அணி, நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் மெக்ஸிகோவை சந்தித்தது.

சனிக்கிழமை 7ஆம் திகதி நடைபெறவுள்ள தங்கப் பதக்கதுக்கான போட்டியில் பிரேசில் – ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.

போட்டி நேரத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற ‘பெனால்டி ஷுட் அவுட்‘ முறையில் பிரேசில் அணி 4–1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஒலிம்பிக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு பிரேசில் அணி தெரிவாகியது.

இதனிடையே, இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஜப்பானை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இதன்மூலம் 1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ஸ்பெயின் அணி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்களுக்கான கால்பந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மெக்ஸிகோ–ஜப்பான் அணிகள் மோதவுள்ளன.


Add new comment

Or log in with...