முதல் போட்டியில் இலகு வெற்றி

அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 45 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ரி 20 போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றிய பங்களாதேஷ் வீரர் நசும் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அவுஸ்திரேலிய அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 5 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ரி 20 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் 36 ஓட்டங்களும், மொகமது நயீம் 30 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் பங்களாதேஷ் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் அவுஸ்திரேலியா திணறியது.

11 ஓட்டங்களுக்குள் 3 முன்னணி வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

பங்களாதேஷ் சார்பில் நசும் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Add new comment

Or log in with...