ஐ.ம.ச. வுக்கு ஆதரவளித்த ஐ.தே.க வினருக்கு வாய்ப்பு!

மீண்டும் இணைக்க ரணில் தீர்மானம்

 

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீண்டும் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பரந்துப்பட்ட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மா நகர சபை , நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விடயங்களை ருவன் விஜேவர்தன, பாலித ரங்கே பண்டார, வஜிர அபேவர்தன மற்றும் சந்தித் சமரசிங்க ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.

சுமார் 1500 பேர் வரையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் மீண்டும் கட்சியில் இணைவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் இதனடிப்படையில் மாவட்ட மட்டத்தில் இடம்பெறும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் ஐ.தே.க வினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...