மாகாணங்கள் இடையேயான பொதுப் போக்குவரத்து நாளை முதல் மீள ஆரம்பம்

மாகாணங்கள் இடையேயான பொதுப் போக்குவரத்து நாளை முதல் மீள ஆரம்பம்-Inter-Provincial Public Transport From August 01-Dilum Amunugama

மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை நாளை (01) முதல் மீள ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை அறிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் பயணிப்பதை உறுதிப்படுத்தியவாறு, பஸ், புகையிரத சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத பொதுப் போக்குவரத்து சேவைகள், கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அத்தியாவசிய சேவைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் இடைநிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் நாளை (01) மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (02) முதல் அனைத்து அரச ஊழியர்களையும் கடமைக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...