மீண்டும் முகக் கவசம் அணிய அமெரிக்கர்களுக்கு வலியுறுத்து

அமெரிக்காவில் கொரோனா தொற்றும் அபாயம் அதிகமுள்ள இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதில் தொற்றக்கூடிய டெல்டா வகை வைரஸ் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதனால், வைரஸ் தொற்றும் அபாயமுள்ள உட்புறப் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த மே மாதம், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 63 வீதமான மாநிலங்களில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததால், மீண்டும் முகக்கவசம் அணியும்படி தற்போது கூறப்பட்டுள்ளது.

பாலர் பாடசாலை முதல், 12ஆம் தரம் வரை, அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கூறியுள்ளது.

 


Add new comment

Or log in with...