ஆஸி. நியூ சவுத் வேல்ஸில் பொது முடக்கநிலை நீடிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடப்பில் உள்ள முடக்கநிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாத இறுதிவரை அங்கு முடக்கநிலை நீடிக்கும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூக அளவில் புதிதாக 180 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது, மூடப்பட்ட இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகள் வேலையிடங்களில் பின்பற்றப்படாதது கவலை அளிப்பதாக மாநில முதல்வர் கிளாடிஸ் பெரஜிக்லியன் கூறினார்.

விதிமுறைகளைக் கடைப்பிடித்து தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே தற்போதைய நிலைக்கான தீர்வு என்றார் அவர்.

அண்டை மாநிலமான விக்டோரியாவில் நேற்று முடக்கநிலை முடிவுக்கு வந்தது. புதிதாக அங்கு 9 பேரிடம் தொற்று அடையாளம் காணப்பட்டது.

ஒருவருடன் ஒருவர் தொடர்புடைய அவர்கள், வைரஸ் தொற்றிய காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

மெல்பர்ன் நகரில் டெல்ட்டா வகை வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 


Add new comment

Or log in with...