இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ வீடியோ நேரம் நீடிப்பு

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ‘ ரீல்ஸ் ‘ என்ற வீடியோக்களை பதிவிடும் பக்கத்தில் இதுவரை 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 60 வினாடி வரை தங்களின் வீடியோக்களை பதிவிடலாம் என இன்ஸ்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ரீல்ஸ் ஸ்டிக்கர்ஸ் மற்றும் ஓடியோவிலிருந்து எழுத்தாக மாறும் அமைப்பை கொண்டு வந்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக நடிப்பையும் , நடனத்தையும் ‘ ரீல்ஸ் ’களில் வெளியிட்டு வருவதால் 30 வினாடி பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருப்பதில்லை என்ற கருத்து இருந்து வந்த நிலையில் தற்போது அந்நிறுவனம் 60 வினாடிகளாக அதிகரித்துள்ளது.

டிக்டொக் செயலியில் 3 நிமிடம் வரை வீடியோ பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...