மீள்குடியேற்ற மக்களுக்கான வீடுகளை இராஜாங்க அமைச்சர் நேரில் பார்வை

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வீடற்று நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் சுமார் 98 குடுப்பங்களுக்கு அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடகளை இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், ஒருசில வீட்டுக்கான அடிக்கல்லினையும் சம்பிரதாயபூர்வமாக நட்டு வைத்திருந்தார்.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் தாண்டியடி கிராமத்தில் நேற்று இடம்பெற்றது. இவ் வீட்டுத் திட்டமானது கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக 2009 ஆம் ஆண்டுக்கு முன் இடம்பெயர்ந்து குடியமர்ந்த குடுப்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது ஒருசில வீடுகளுக்கு அடிக்கல் வைக்கப்பட்டதுடன், வீட்டுக்கான காசோலைகளும் வழங்கப்பட்ட அதேவேளை, அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அந்த குடும்பங்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் தொடர்பாகவும் அறிந்து கொண்டார்.

இந்நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக ராஜபக்ஷ , மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் ,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்த கொண்டனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...