3 நாட்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

3 நாட்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி-One million Person Vaccinated within 3 Days-COVID Vaccination-Immunization Progress-July 28

- இதுவரை 87 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- இரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்: சுமார் 20 இலட்சம் பேர்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, கடந்த 3 நாட்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (28) மாத்திரம் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு (417,815) தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

நேற்றையதினம் (28),

- Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ், 344,458 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 32,288 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Pfizer தடுப்பூசி முதலாம் டோஸாக 40,912 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Moderna தடுப்பூசியை முதல் டோஸாக 157 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை
Covishield:
- 1ஆவது டோஸ் - 925,242 பேர்
- 2ஆவது டோஸ் - 385,885 பேர்

Sinopharm:
- 1ஆவது டோஸ் - 6,769,468 பேர்
- 2ஆவது டோஸ் - 1,593,996 பேர்

Sputnik-V:
- 1ஆவது டோஸ் - 159,081 பேர்
- 2ஆவது டோஸ் - 14,503 பேர்

Pfizer:
- 1ஆவது டோஸ் - 155,017 பேர்

Moderna:
- 1ஆவது டோஸ் - 709,625பேர்

அந்த வகையில் இதுவரை 87 இலட்சத்து 18 ஆயிரத்து 433 பேருக்கு (8,718,433) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

19 இலட்சத்து 94 ஆயிரத்து 384 பேருக்கு (1,994,384) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...