ஹற்றன் மாவட்ட நீதிமன்றத்துக்கு பூட்டு

ஹற்றன் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஹற்றன்- டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பதிவாளருக்கு தொற்று உறுதியானதையடுத்து, நேற்று மேற்கொள்ளவிருந்த வழக்குகளை வேறொரு தினங்களுக்கு பிற்போடுமாறு நீதிவான் இமேஷா பட்ட பெந்திகோ உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பதிவாளர் கடந்த 22 ஆம் திகதி மன்றுக்கு வந்ததாகவும் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதையடுத்து அவர் பி.சி.ஆர் பரிசோதனை செய்துக்கொண்ட போதே தொற்று இருப்பது உறுதியானது என அட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். தற்போது மூடப்பட்டுள்ள நீதிமன்றம், அதன் வளாகத்திற்கு தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டு, அலுவலர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்தவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 

Add new comment

Or log in with...