ரிஷாத் வீட்டில் பலியான சிறுமி தொடர்பான விசாரணையில் அரசாங்கம் தலையீடு செய்யாது

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா

ரிஷாத் பதியுதீன், இறையாண்மை கொண்ட பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்து கொண்டு குறைந்த வயதுடையவரை தனது வீட்டில் அடிமை வேலைக்கு வைத்திருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இது தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் எதுவித தலையிடும் செய்யாதென இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார். கண்டியில் ஊடகவியாளர் மத்தியில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறுவர் துன்புறுத்தல் அவர் வீட்டில் நடத்துள்ளது. சிறுமி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவளுக்கு தீ வைத்தார்களா? என்பது தொடர்பில் எதிர்காலத்தில் உண்மை வெளிப்படும். சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் இது தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் எதுவித தலையிடும் செய்யாதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ரிஷாத் பதியுதீனின் கட்சி செயல்பட்டு வருவதாகவும், பாராளுமன்றத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழு அளித்த அறிக்கைகளை நன்கு அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார்.

எம்.ஏ.அமீனுல்லா, அக்குறணை குறூப் நிருபர்

 

Add new comment

Or log in with...