ரிஷாத் தரப்பினரை எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து நீக்கிவிட்டோம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி
தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை நேற்று (28) குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற வேளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...