முறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அனைவருக்கும் நிலையான நகரத்தின் வசதிகளை அனுபவிக்கக் கூடிய வகையில் முறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று (27) தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரே தடவையில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் 'நூறு நகரங்கள் அபிவிருத்தி திட்டம்' குருநாகல் ஹிரிபிட்டிய நகரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மேற்படி தேசிய நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் தலைமையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதை குறிக்கும் வகையில் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவினால் ஹிரிபிட்டிய நகரை அபிவிருத்தி செய்வதற்கான பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

நூறு நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக ஒரு நகரை அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதற்காக அரசாங்கம் செலவிடும் தொகை 20 மில்லியன் ரூபாயாகும். அதற்கமைய நூறு நகரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக 2,000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இந் நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.


Add new comment

Or log in with...