கிணற்றில் வீழ்ந்து இளம் தம்பதி பலி

முல்லைத்தீவு பகுதியில் சோகம்

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன் (31) பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்.இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றிய நிலையில் திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...