இந்திய கடற்படை கப்பல் தபரின் இந்திய - பிரான்ஸ் கூட்டுப்பயிற்சியை நிறைவு

இந்திய கடற்படை கப்பல் தபரின் இந்திய - பிரான்ஸ் கூட்டுப்பயிற்சியை நிறைவு-Indian Naval Ship Joint Training

பிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் துறைமுகத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்ட இந்திய கடற்படை கப்பலான தபர், பிஸ்கே விரிகுடாவில் பிரான்ஸ் நாட்டு கடற்படைப் படையான எஃப்.என்.எஸ் அக்விடைனுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சியில் அண்மையில் ஈடுபட்டுள்ளது. 

எஃப்.என்.எஸ் அக்விடைனைச் சேர்ந்த என்.எச் 90 ஹெலிகாப்டர் மற்றும் பிரெஞ்சு கடற்படையின் நான்கு ரஃபேல் சண்டை விமானங்களும் இப்பயிற்சியில் பங்கேற்றன. இந்த கூட்டு பயிற்சி தொடர்பில் இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளரின் ட்வீட்டர் செய்தியில், 'இங்கு  இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைகளில் கடல் மேற்பரப்பு சூழ்ச்சிகளை முறியடித்தல், இலக்கை நோக்கி துல்லியமாக பிரயோகம் செய்தல், கடல் அணுகுமுறையை நிரப்புதல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்கி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.என். எஸ் தபர் கப்பல் பிரெஞ்சு கடற்படை ஃப்ரிகேட் எஃப்.என்.எஸ் அக்விடைனுடன் பிஸ்கே விரிகுடாவில் இம்மாத நடுப்பகுதியில் இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் அந்த ட்வீட் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரான்ஸ் நாட்டு கடற்படையினர் இந்து சமுத்திர கடற்படை மாநாட்டின் (ஐ.ஓ.என்.எஸ்) ஏழாவது அமர்வை இத்தாலியின் லா ரீயூனியனில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் நடாத்தினர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த அமர்வின் தொடக்க விழாவில் இந்திய கடற்படையின் பிரதான தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மெய்நிகர் மூலம் பங்குபற்றினார்.

2008 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையினால் உருவாக்கப்பட்ட ஐ.ஓ.என்.எஸ், ஐ.ஓ.ஆரின் லிட்டோரல் அரசுகளின்  கடற்படையினரிடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.


Add new comment

Or log in with...