ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற சகோதரன், சகோதரி

ஒலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனை

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் 30 நிமிட இடைவெளியில் ஜூடோ விளையாட்டில் தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர்.

23 வயதான ஹிஃபுமி அபே ஆண்களுக்கான ஜூடோ போட்டியிலும் 21 வயதான யுட்டா அபே பெண்களுக்கான ஜூடோ போட்டியிலும் தங்கப் பதக்கங்களை ஞாயிற்றுக்கிழமை வென்று பலத்த பாராட்டைப் பெற்றனர்.

நிப்பொன் புடோகான் அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான 52 கிலோ கிராம் எடைக்கு கீழ்ப்பட்ட பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பிரான்ஸைச் சேர்ந்த அமண்டைன் புச்சார்டை வெற்றிகொண்டு யுட்டா அபே தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

சுமார் 30 நிமிடங்கள் கழித்து யுட்டாவின் மூத்த சகோதரரான ஹிஃபுமி அபே தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆண்களுக்கான 66 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஜோர்ஜியா வீரர் வாஷா மார்ப்வேலாவிலியை எதிர்த்தாடிய ஹிஃபுமி அபே 2 நிமிடங்களில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

சகோதரனும் சகோதரியுமாகிய ஹிஃபுமி, யுட்டா ஆகிய இருவரும் இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு உலக ஜூடோ சம்பியன் சிப்பில் பங்குபற்றி ஒரே சர்வதேச போட்டியில் பங்குபற்றிய முதலாவது சகோதரன், சகோதரி என்ற வரலாற்றைப் படைத்திருந்தனர்.

2018இல் இருவருமே உலக சம்பியனாகியிருந்தனர்.2019இல் யுட்டா மீண்டும் சம்பியனான போதிலும் ஹிஃபுமி 3ஆம் இடத்தைப் பெற்றிருந்தார்.

இப்போது அந்த வெற்றிகளைவிட மிகப் பெரிய வெற்றிகளை இருவரும் ஒலிம்பிக்கில் ஈட்டி வரலாறு படைத்துள்ளனர்.


Add new comment

Or log in with...