ஒரே நாளில் அதிகூடிய வகையில் 4 இலட்சத்து 37ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஒரே நாளில் அதிகூடிய வகையில் 4 இலட்சத்து 37ஆயிரம் பேருக்கு தடுப்பூசி-COVID Vaccination-Immunization Progress-July 26

- இதுவரை 78 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- இரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்: சுமார் 19 இலட்சம்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்றையதினம் (26) மாத்திரம் சுமார் 4 1/2 இலட்சம் பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

நேற்றையதினம் (26),

- Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ், 356,628 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 55,722 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Pfizer தடுப்பூசி முதலாம் டோஸாக 108 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Moderna தடுப்பூசியை முதல் டோஸாக 25,420 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை
Covishield:
- 1ஆவது டோஸ் - 925,242 பேர்
- 2ஆவது டோஸ் - 385,885 பேர்

Sinopharm:
- 1ஆவது டோஸ் - 5,945,237 பேர்
- 2ஆவது டோஸ் - 1,482,305 பேர்

Sputnik-V:
- 1ஆவது டோஸ் - 159,081 பேர்
- 2ஆவது டோஸ் - 14,503 பேர்

Pfizer:
- 1ஆவது டோஸ் - 114,075 பேர்

Moderna:
- 1ஆவது டோஸ் - 696,003 பேர்

அந்த வகையில் இதுவரை 78 இலட்சத்து 39 ஆயிரத்து 638 பேருக்கு (7,839,638) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

18 இலட்சத்து 68 ஆயிரத்து 190 பேருக்கு (1,868,190) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...