கொரோனா தடுப்பூசி கொள்வனவு: அரசாங்கம் 1546 கோடி ரூபா செலவு

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்வனவுக்காக அரசாங்கம் இதுவரை 1546 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரசாங்கமானது இதுவரை கொள்வனவு செய்துள்ள 87 இலட்சத்து 95 ஆயிரத்து 800 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்காகவே மேற்படி தொகையை செலவிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக 33 இலட்சத்து 64 ஆயிரத்து 100 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நாட்டிற்கு நன்கொடையாக கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க இதுவரை நாட்டிற்கு ஒரு கோடியே 21 இலட்சத்து 59 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க இதுவரை 91 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி, 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசி, 12 இலட்சத்து 64 ஆயிரம் எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி, ஒரு லட்சத்து 86 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசி,ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 800 பைசர் தடுப்பூசி ஆகியவை நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...