பாண்டிருப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பாண்டிருப்பு சோமநாதர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 46 வயது ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான த.திருச்செல்வம் (46வயது) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் புதிதாக கட்டப்பட்டு வந்த தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (26) திங்கட்கிழமை காலையில் வீட்டின் படுக்கை அறையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாண்டிருபபு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...