சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதிகோரி ஜனாதிபதிக்கு மகஜர்

ஹற்றனில் சிறுவர் இல்ல சிறுவர்கள் கையெழுத்து சேகரிப்பு

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த டயகம மூன்றாம் பிரிவைச் சேர்ந்து ஹிசாலினி தீக்காயங்களுடன் மர்மான முறையில் மரணமடைந்தார்.அதையடுத்து ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஹற்றன் மெதஸ்டிக் சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.

'கல்வி கற்பது எங்களின் உரிமை' 'எதிர்கால தலைவர்கள் நாங்கள்' 'ஏன் எங்கள் வாழ்க்கையை சீரழிக்கீறீர்கள்', 'ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர்' 'ஏன் இந்த ஏற்றத்தாழ்வு' போன்ற வாசகம் எழுதிய பதாதைகளைகாட்சிப்படுத்தி கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் ஈடுப்பட்டனர்.

இந் நடவடிக்கை டன்பார் வீதியில் ஹற்றன் ஹைலன் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இதன் போது இவர்கள் வீதியில் செல்பவர்களிடம் கையெத்துக்களை பெற்றனர்.

இது குறித்த சிறுவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மலையகத்தில் உள்ள சிறுவர்களை கல்வியில் ஈடுபடுத்தாது வேலைக்கு அமர்த்தி சிறுவர்ளை துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். அண்மையில் இடம்பெற்ற ஹிசாலினியின் சம்பவம் அவ்வாறான ஒன்று. அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது நிறுத்த கோரி நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பவதற்கு கையெழுத்து பெற்று வருகிறோம். அத்தோடு ஹிசாலினக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...