செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறப்பு

அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கிய பின்னர் நாடு முழுமையாக திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்காலம் அந்தளவு இருளானது அல்ல என குறிப்பிட்டுள்ள அமைச்சர்,எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை நிறைவுசெய்த நாடாக இலங்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் நாட்டை முழுமையாக திறப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம் பெற்றுள்ள நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...