நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

மனந்திறந்தார் ரணில் விக்ரமசிங்க

சரியான கொள்கை கட்டமைப்பை நிறுவ தவறியமையே நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டிற்கு தேவைப்படுவது பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி அல்ல, மாறாக நாட்டை கொண்டு நடத்தும் நீண்ட கால கொள்கை கட்டமைப்பாகும்.

சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் தவறானவற்றை நிராகரித்து சீரான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு நல்ல உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளைப் போலவே அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் பொதுவான கொள்கைகள் நாட்டுக்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Add new comment

Or log in with...