இஸ்ரேல்- மொரோக்கோ இடையே விமானப் போக்குவரத்து ஆரம்பம்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஆண்டில் இஸ்ரேல் மற்றும் மொரோக்கோ இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே முதல் முறை நேரடி விமானப் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலில் இஸ்ராயிர் விமானம் நேற்று சுமார் 100 பயணிகளுடன் டெல் அவிவில் இருந்து மொரோக்கோவின் மரகாஷ் நகரை அடைந்துள்ளது. இந்த பயணப்பாதையில் வாரத்தில் இரு விமானங்களை பயணிக்கச்செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ராயிர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டவுடன் மொரோக்கோவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யயிர் லபிட் கடந்த வாரம் கூறியிருந்தார். 2020 ஆம் ஆண்டில் பிராந்தியத்தில் பஹ்ரைன், சூடான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் மொரோக்கோவும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியது.

வட ஆபிரிக்காவில் அதிக யூத மக்கள் வாழும் நாடாக மொரோக்கோ உள்ளது. மொரோக்கோவில் சுமார் 3,000 யூதர்கள் இருப்பதோடு மொரோக்கோவை பூர்வீகமாகக் கொண்ட 700,000 யூதர்கள் இஸ்ரேலில் வாழ்கின்றனர்.


Add new comment

Or log in with...