உளவு தொழில்நுட்ப விற்பனையை தடை செய்வதற்குக் கோரிக்கை

உளவுத் தொழில்நுட்பங்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் தடை செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திறன்பேசிகளை வேவு பார்ப்பதற்கு பெகசுஸ் மென்பொருள் எனும் இஸ்ரேலிய வேவு நச்சுநிரல் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள வேளையில், சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நச்சுநிரல் வழி, சில நாடுகளின் நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசாங்கத் தலைவர்கள் வேவு பார்க்கப்படுவதாகக் கூறப்படுவது, மனித உரிமைக்கான உலகளாவிய நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது என்று அமைப்பு கூறியது.

என்.எஸ்.ஓ குழுமத்தின் பெகசுஸ் மென்பொருள் வழி, கைத்தொலைபேசிகளின் கெமராவையும், ஒலிபெருக்கியையும் செயல்படுத்தமுடியும். அதன் மூலம், தரவுகளையும் சேகரிக்க முடியும். அண்மையில், அந்த நச்சுநிரல் இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய சுமார் 50,000 பேரின் பட்டியல் கசிந்தது. மன்னிப்புச் சபை, பிரான்ஸ் ஊடகமான போர்பிடன் ஸ்டோரிஸ் ஆகியவை மற்ற சில ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து பட்டியலை ஆராய்ந்து, வெளியிட்டன. அதை அடுத்து, கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை, உளவுத் தொழில்நுட்பங்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்று மன்னிப்புச் சபை கோரியது.

இணையக் கண்காணிப்புத் துறை மீது கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைப்பு கூறியது


Add new comment

Or log in with...