உலக நாடுகளிடம் ஒத்துழைப்பை கேட்கும் உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு, கொவிட்-19 நோய் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்க உலகளவிலான ஒத்துழைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரண்டாம் கட்ட விசாரணைக்கான அந்த அமைப்பின் பரிந்துரையைச் சீனா நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இம்மாத ஆரம்பத்தில், சீனாவில் புதிய விசாரணைக்கு அமைப்பு பரிந்துரைத்தது. வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்ட ஆய்வுக் கூடங்களில் சோதனை நடத்துவதற்கு அது கோரிக்கை விடுத்திருந்தது.

விலங்கிலிருந்து வைரஸ் பரவியதா என்பதைக் கண்டறியும் முயற்சியில் மெதுவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதால் சுகாதார அமைப்பு அவ்வாறு முன்மொழிந்தது. வூஹான் ஆய்வுக்கூடத்திலிருந்து வைரஸ் முதலில் கசிந்திருக்கக்கூடும் என்ற ஊகத்தை இதற்கு முன்னர் சீன, உலக சுகாதார அமைப்பின் கூட்டுக்குழு நிரகாரித்த போதும், அந்தச் சந்தேகம் நீடிக்கவே செய்கிறது. சீனா விசாரணையை நிராகரித்தது ஆபத்தானது என்றும் பொறுப்பற்ற செயல் என்றும் அமெரிக்கா குறைகூறியுள்ளது. கடந்த மே மாதம், கொவிட்-19 நோய் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டறியும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...