இறந்து நான்கு நாட்கள் எங்கே போயிருந்தீர்கள்?; அப்பாவி சிறுமியின் மரணத்தில் அரசியல் குளிர்காய வேண்டாம்

ராஜூ பாஸ்கரன் MMC காட்டமான அறிக்கை

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்து தீக் காயங்களுக்கு உள்ளாகி மரணமான 16 வயது அப்பாவி சிறுமி தொடர்பான விடயங்களில் தயவு செய்து எவரும் அரசியல் செய்து குளிர்காய வேண்டாம் என கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவருமான ராஜூ பாஸ்கரன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலும், மலையகத்திலும் சில அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை பார்க்கும் போது தமது சரிந்திருக்கும் அரசியல் நிலைமையை சரி செய்வதற்கு அப்பாவிச் சிறுமியின் மரணத்தை வைத்து பிழைப்பு நடத்துவது போன்று தெட்டத் தெளிவாக தெரிகிறது.

அந்த அளவிற்கு இரண்டாம்தர அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வீரவசனங்கள் பேசப்படுகின்றன. சிறுமி இறந்து 4 அல்லது 5 நாட்கள் வரை வாய்மூடி மௌனிகளாக இருந்து விட்டு இப்போது ஊடகங்களில் தாங்கள்தான் எல்லாம் செய்வது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். உண்மையில் அரசாங்கம் நீதித்துறை மூலமாக சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


Add new comment

Or log in with...