நாவற்குழி ரஜமஹா விகாரை கோபுர திறப்பு விழா

தென்மராட்சி-நாவற்குழி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோபுரத்தினை எதிர்வரும் 31ஆம் திகதி சனிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் நாவற்குழி பகுதியில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 182 வீடுகளுக்கான உரிமப் பத்திரங்கள் வழங்கப்படவிருப்பதுடன்,சில வீட்டுத் திட்ட வீடுகளுக்கான அடிக்கல்லையும் நட்டு வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையில் விடுதி திறப்பு வைபவம், வேலணையில் பல்பரிமாண நகரத் திட்டத்திற்குள் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜனால் முன்மொழியப்பட்ட வேலணை நகரை பல்பரிமாண நகரமாக்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார். யாழ் மாவட்டத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் பௌத்த தலங்களை தரிசிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...