ஒரே நாளில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

ஒரே நாளில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி-COVID Vaccination-Immunization Progress-Juy 24 2021

- முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்: 71 இலட்சம்
-இரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்: சுமார் 18 இலட்சம்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு அமைய, நேற்றையதினம் (24) மாத்திரம் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்றையதினம் (24) மாத்திரம்,

- Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ், 306,622 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 35,720 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Sputnik-V தடுப்பூசி இரண்டாம் டோஸாக 39 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Moderna தடுப்பூசியை முதல் டோஸாக 69,830 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை
Covishield:
- 1ஆவது டோஸ் - 925,242 பேர்
- 2ஆவது டோஸ் - 385,885 பேர்

Sinopharm:
- 1ஆவது டோஸ் - 5,270,508 பேர்
- 2ஆவது டோஸ் - 1,393,084 பேர்

Sputnik-V:
- 1ஆவது டோஸ் - 159,081 பேர்
- 2ஆவது டோஸ் - 14,503 பேர்

Pfizer:
- 1ஆவது டோஸ் - 126,058 பேர்

Moderna:
- 1ஆவது டோஸ் - 633,198 பேர்

அந்த வகையில் இதுவரை 71 இலட்சத்து 14 ஆயிரத்து 87 பேருக்கு (7,114,087) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அத்துடன், 17 இலட்சத்து 93 ஆயிரத்து 472 பேருக்கு (1,793,472) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...