சீன கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் உண்மையிலேயே நண்பர்கள்

சீனாவில் வாழும் வெளிநாட்டவர்கள் பலருக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அவர்களது அன்றாட வாழ்வில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்று விளக்க மில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கொடிகளை ஏந்தித் திரியவில்லை. சுலோகங்களை எழுப்பவில்லை. அவர்கள் வழமையான கடமைகளை

செய்யும் சாதாரண மக்களே. ---- சமூக தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வெல்டேர்ஸ், ஓய்வு பெற்ற போர்வீரர்கள், டாக்டர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராம அதிகாரிகள் என்று பல்வகைப்பட்டவர்கள். அவர்கள் வாழ்வின் சகல துறைகளையும் சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டவர்களின் பார்வையில் அவர்கள் நேர்மையான நண்பர்களாகவும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட சேவகர்களாகவும் இருக்கிறார்கள்.

கான்பெராவின் அவுஸ்திரேலியா நிறுவனத்தில் ஆராய்ச்சி பணிப்பாளராக இருக்கும் றொட் காம்பெல் வடமேற்கு சீனாவின் கான்சு விவசாய பல்கலைக்கழகத்தில் இரு வருடங்களை செலவிட்டவர்." எனது சகல சகாக்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களே.கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமளவு உறுப்பினர்களை நான் அறிவேன்.அவர்கள் சாதாரண சீன மக்களே" என்று அவர் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைப் பற்றி மேற்குலக ஊடகங்களில் தவறான விளக்கப்பாட்டை காம்பெல் கண்டிருக்கிறார். பெரும்பாலான சீன மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியையும் அரசாங்கத்தையும் ஆதரிக்கிறார்கள் என்பது மேற்குலகில் உள்ள பலருக்கு தெரியாது என்று காம்பெல் கூறுகிறார்.

"ஒரு நூற்றாண்டு வளர்ச்சியின் ஊடாக கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தலைமை தாங்கி வழிநடத்தியிருக்கிறது. செங்கொடியின் கீழ் மக்களுக்காக போராடியிருக்கிறது" என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக நூற்றாண்டை முன்னிட்டு அமெரிக்கரான மார்க் லெவின் இயற்றி தனது 'வீ சற்றில்' பதிவு செய்த கவிதையில் கூறியிருக்கிறார்.

73 வயதான லெவின் சீனாவின் மின்சு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார்.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் மத்திய பெய்ஜிங்கில் உள்ள தியனென்மென் சதுக்கத்தில் ஜூலை முதலாம் திகதி குழுமிய சுமார் 70 ஆயிரம் பேரில் லெவினும் ஒருவர்.

"சீனாவில் எனது வருடங்களில் என்னால் காணக் கூடியதாக இருந்தவற்றை நோக்குவேனாக இருந்தால், அது பெரும்பாலும் அதிசயமேயாகும்.அந்த சாதனைகள் சீன மக்களினால் நிகழ்த்தப்பட்டவையாகும்.ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் போதனைகளின் கீழ் நிகழ்த்தப்பட்டவையாகும்"என்று அவர் கூறினார்.

"கல்வியிலும் மருத்துவ பராமரிப்பிலும் மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டது.கொவிட் -- 19 க்கு எதிரான போராட்டத்தில் பிரமாண்டமான சாதனைகளை எம்மால் காணக் கூடியதாக இருக்கிறது" என்று அவர் சொன்னார்.

தென்னாபிரிக்க குத்துச்சண்டை பயிற்சியாளர் எடுவார்டோ சானரான்டெர் பத்து வருடங்கள் சீனாவில் வாழ்ந்திருக்கிறார். அவரைப் பொறுத்த வரை, தன்னிடம் பயிற்சி பெற வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான ஒருவரைச் சந்திக்கும் வரை அந்தக் கட்சி புரிந்து கொள்ள முடியாத ஒரு கோட்பாடாகவே இருந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பது சான்ரான்டெருக்கு விளங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூடுதலாக வேலை செய்கிறார்கள். ஏனைய மக்களை விடவும் கூடுதலாக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான்ரான்டெரின் கருத்துக்களையே 29 வயதான அமெரிக்க பெண்மணியான ஆங்கில ஆசிரியர்எலினா போர்ட்டிலோவும் சொன்னார்.தனது சமூகத்தில் உள்ள உதவும் மனப்பான்மையுடைய கண்ணியமான பெண்ணைப் பற்றி பேசும் போது எலினா மகிழ்சியில் சிரித்தார்.

கட்சி உறுப்புரிமை என்பது ஒரு அரசியல் அடையாளம் மாத்திரமே என்று நான் நினைத்தேன். ஆனால், சீனாவில் அத்தகைய அடையாளம் என்பது பெருமளவு அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது.கொவிட் பெருந்தொற்றின் போது அந்த பெண்மணி எமது சமூகத்தின் நுழைவாயிலில் கடமைக்கு நிறுத்தப்பட்டார். அவர் விருந்தினர்களின் வெப்பநிலையை பரிசோதித்து பதிவு செய்தார். அது ஒரு குளிர்காலம். குளிரில் நடுநடுங்கிக் கொண்டே அவர் அந்த பணிகளைச் செய்தார்.

(சின்ஹுவா)


Add new comment

Or log in with...