வத்தளை பகுதியில் 24 மணி நேர நீர் வெட்டு

வத்தளை பகுதியில் 24 மணி நேர நீர் வெட்டு-24 Hour Water Cut in Wattala Area

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக வத்தளை பிரதேசத்தில் பல பகுதிகளில் நாளை மறுதினம் (26) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வத்தளை - நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோல பிரதேச்தின் ஒரு பகுதியும், வெலிகடமுல்ல, ஹெந்தள வீதி - நாயககந்த சந்தி வரையிலான இடைப்பட்ட வீதிகளுக்கும் வழியாகவும் நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை தவிர, அல்விஸ் டவுண், மருதானை வீதி, புவத்வத்த வீதி, கலஹதூவ மற்றும் கெரவலபிட்டியின் ஒரு பகுதிக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படுமென, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...