3rd ODI; SLvIND: இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்

3rd ODI; SLvIND: இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்-3rd ODI-SLvIND-India Won the Toss & Elected to Bat First

- இப்போட்டியில் இந்திய அணியில் 5 புதிய வீரர்கள் அறிமுகம்

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு இப்போட்டி வெறும் காட்சிப் போட்டியாக அமையவுள்ள நிலையில், இலங்கை அணிக்கு இது வாழ்வா சாவா? எனும் வகையில் தங்களது திறமையை முழுமையாக காண்பித்து முழுமையான தொடர் தோல்வியிலிருந்து வெளியேறுவதை காண்பிக்க வேண்டிய போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, ஆர். பிரேமதாஸ (RPS) மைதானத்தில் பகலிரவு போட்டியாக இப்போட்டி இடம்பெறுகின்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ஷிகர் தவான், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஷிகர் தவான் தனது தொடையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் cool

அத்துடன் தமது அணியில் 5 புது முக வீரர்கள் களமிறங்குவதோடு, நவ்தீப் சைனி அணியில் இணைக்கப்பட்டதன் அடிப்படையில் அணியில் 6 மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தவான் தெரிவித்தார்.

இலங்கை அணியில் 3 மாற்றங்கள் மேற்கொண்டுள்ளதாக தசுன் ஷானக தெரிவித்தார். பிரவீன் ஜயவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அகில தனஞ்சய ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய அணியில் நிதிஷ் ரானா, ராஹுல் சாஹர், சேத்தன் சக்கரியா, கே. கெளதம், சஞ்சு சம்சன் ஆகியோர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் புது முக வீரர்களாக இப்போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இவ்வாறு அதிகளவிலான வீரர்கள் களமிறங்கிய போட்டியாக 1980ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனான போட்டி அமைந்திருந்தது. 

Sri Lanka: 1 Avishka Fernando, 2 Minod Bhanuka (wk), 3 Bhanuka Rajapaksa, 4 Dhanajaya de Silva, 5 Charith Asalanka, 6 Dasun Shanaka (capt), 7 Ramesh Mendis, 8 Chamika Karunaratne, 9 Dushmantha Chameera, 10 Akila Dananjaya, 11 Praveen Jayawickrama

India: 1 Prithvi Shaw, 2 Shikhar Dhawan (capt), 3 Sanju Samson (wk), 4 Manish Pandey, 5 Suryakumar Yadav, 6 Hardik Pandya, 7 Nitish Rana, 8 K Gowtham, 9 Rahul Chahar, 10 Navdeep Saini, 11 Chetan Sakariya


Add new comment

Or log in with...