ஒலிம்பிக் ஆதரவாளர் Toyota, விளையாட்டுகள் பற்றிய தொலைக்காட்சி விளம்பரங்களை மீட்டுக்கொண்டது

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான Toyota, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடர்பாக எடுத்த தொலைக்காட்சி விளம்பரங்களை மீட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

கிருமித்தொற்றுச் சூழலில் போட்டியை நடத்த ஜப்பானியர்கள் இடையே ஆதரவு குறைவாக உள்ளதால் Toyota அந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஜப்பானியர்களில் மூன்றில் இருவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவு தரவில்லை என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் Toyota நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலந்து கொள்ளமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக Toyota உட்பட சுமார் 60 ஜப்பானிய நிறுவனங்கள் 3 பில்லியன் டொலருக்கு மேலான நிதி ஆதரவு வழங்கியுள்ளனர்.

நோய்த்தொற்றுக் காலத்தில் நடத்தப்படும் போட்டிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதா இல்லையா என்று மற்ற சில நிறுவனங்கள் செய்வதறியாது உள்ளன.

தற்போது தோக்கியோவில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருக்கும் ஒலிம்பிக் கிராமத்திலும் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறுகின்றன.


Add new comment

Or log in with...