உலகில் வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிப்பால் அச்சம் | தினகரன்

உலகில் வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிப்பால் அச்சம்

அமெரிக்காவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

அது, வைரஸ் பரவலின் கடுமை மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றும் தன்மை அதிகம் உள்ள டெல்டா திரிபு, வேகமான வைரஸ் பரவலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் சில மாநிலங்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பழைய வகை வைரஸ்கள் அளவுக்கு, டெல்டா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டிருக்கவில்லை என ஆய்வகச் சோதனைகள் காட்டுகின்றன.

பசைர் – பயோஎன்டென், அஸ்ட்ரா செனெக்கா தடுப்புமருந்துகள், இரண்டுமுறை செலுத்தப்பட்டவர்களிடம் டெல்டா வைரஸ் பரவுவது கணிசமாகக் குறைவு என்று ஆய்வுகள் காட்டின.

எனவே, தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொள்வது முக்கியம் என்பதை அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். 

 


Add new comment

Or log in with...