அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவராக அலெக்ஸ் கேரி நியமனம் | தினகரன்

அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவராக அலெக்ஸ் கேரி நியமனம்

அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவராக அலெக்ஸ் கேரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ரி -20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி-20 தொடரில், 4-–1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் தொடரை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் ரி -20 தலைவராக உள்ள ஆரோன் பிஞ்ச், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் பிஞ்ச் காயம் காரணமாக விலகியதால், முதலாவது ஒருநாள் போட்டிக்கான தலைவராக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.

விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான அலெக்ஸ் கேரி, அவுஸ்திரேலிய அணியின் துணை தலைவர் பொறுப்பில் இருந்தார். தற்போது அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தலைவராக பதவியேற்கும் 26வது நபர் என்ற பெருமையை அலெக்ஸ் கேரி பெற்றுள்ளார்.


Add new comment

Or log in with...