கிரிக்கெட் உலகின் பிரம்மாண்டமான சிக்சர் அடித்த இங்கிலாந்தின் வீரர்

இங்கிலாந்து சுற்றுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி 20 போட்டி நேற்றுமுன்தினம் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியை தனதாக்கியது.

முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில் இன்று 2வது போட்டியில் இங்கிலாந்து வென்றிருப்பதன் மூலமாக தொடர் இன்னும் விறுவிறுப்பு தன்மையை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 16 வது ஓவரை வீசிய பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் உடைய முதலாவது பந்தை சிக்சருக்கு மிரட்டிய லியம் லிவிங்ஸ்டன் ஒரு மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.

கிரிக்கெட் உலகின் பிரம்மாண்டமான சிக்சராக இதுவே இருக்கும் என்று எல்லோரும் வியக்கும் அளவிற்கே இந்த சிக்சர் அமைந்தது.

லீட்ஸ் மைதானத்தின் கூரையின் உயரம் 69 அடிகளாக இருக்கின்றபோது இந்த சிக்ஸர் 85 அடி உயரம் பறந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன

இது மாத்திரமல்லாமல் இவர் அடித்த சிக்சர் 122 மீற்றருக்கும் அதிக தூரம் சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகமாக கிரிக்கெட் உலகின் பிரம்மாண்டமான சிக்சர் சாதனை இந்த சிக்ஸ்க்கே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது, கிரிக்கெட் உலகின் பிரம்மாண்டமான சிக்சர் எனும் சாதனை பதிவு எதுவும் இல்லாத நிலையில், லியம் லிவிங்ஸ்டன் அடித்த இன்றைய சிக்சர் எல்லோரையும் மிரள வைத்தது.

பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் வீரர்கள் எல்லோருக்கும் பயத்தை காண்பிக்கும் ஒரு வீரராக லியம் லிவிங்ஸ்டன் காணப்படுகிறார்.

ஏனெனில் 170 ரி 20 போட்டிகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 20க்கு20 போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை கடந்த போட்டியில் லியம் லிவிங்ஸ்டன் பெற்றுக்கொண்டார் என்பதும் நினைவுபடுத்ததக்கது.

இந்த போட்டிகளில் இலகுவான வெற்றியை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.

கிரிக்கெட் உலகின் பிரம்மாண்ட சிக்சர் இதுவா என டுவிட்டர் வாசிகள் கேள்வி தொடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...