உலகமயமாக்கலின் உண்மைத்தன்மையை இந்து - பசிபிக் பிராந்திய யதார்த்தம் பிரதிபலிக்கிறது | தினகரன்

உலகமயமாக்கலின் உண்மைத்தன்மையை இந்து - பசிபிக் பிராந்திய யதார்த்தம் பிரதிபலிக்கிறது

உலகமயமாக்கலின் உண்மைத்தன்மையை இந்து - பசிபிக் பிராந்திய யதார்த்தம் பிரதிபலிக்கிறது-Globalization-Indo Pacific Region-S Jaishankar

- இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இந்து -பசிபிக் பிராந்தியத்தில் உருவாகி வரும் நிலைமை உலகமயமாக்கலின் யதார்த்தத்தையும், பன்முகத்தன்மை வெளிப்படுவதையும், மறு சமநிலையின் நன்மைகளையும் பிரதிபலிக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்து - பசிபிக் வணிக உச்சி மாநாட்டின்  அங்குரார்ப்பண அமர்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், 'பிராந்தியத்திற்கான ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் பரந்த கொள்கை செழிப்பை ஊக்குவிப்பதிலும், உலகளாவிய வர்த்தகத்தைப் பாதுகாப்பதிலும் உள்ள கூட்டு நலன்களின் வெளிப்பாடாகும் என்றார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உலகமயமாக்கலின் உண்மைத்தன்மையை இந்து-பசிபிக் பிராந்திய யதார்த்தம் வௌிப்படுத்துகின்றது.  பன்முகத்தன்மை மற்றும் மறு சமநிலையின் நன்மைகள் என்பதானது பனிப்போரை வெல்வதும் இருமுனைத்தன்மை மற்றும் ஆதிக்கத்தை நிராகரித்தலுமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக,  உலகளாவிய செழிப்பை ஊக்குவிப்பதும் வர்த்தகத்தைப் பாதுகாப்பதும் எங்கள் கூட்டு நலன்களின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். இந்தியாவின் இந்து-பசிபிக் சமுத்திர முயற்சி (ஐ.பி.ஓ.ஐ) இதனைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது என்றார்.

2019 இல் பேங்கொக்கில் நடந்த கிழக்காசியா உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கடல்சார் களத்தை பாதுகாக்கவும், நிலையானதாகப் பயன்படுத்தவும், பாதுகாப்பான கடல் களத்தை உருவாக்குவதற்கான அர்த்தமுள்ள முயற்சிகளை முன்னெடுக்கவென இந்து - பசுபிக் சமுத்திரங்கள் முயற்சியை அமைக்க முன்மொழிந்திருந்தார்.

சீனாவின் அதிகரித்துவரும் இராணுவ பிரசன்ன தன்மையை அடுத்து இந்து-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகி வரும் நிலைமைகள் முன்னணி உலக சக்திகளிடையே ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்து-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் மூலோபாய நலன்களைக் கருத்தில் கொண்டு பல நாடுகளும் அணிகளும் தங்கள் கவனத்தை இங்கு செலுத்தியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் இந்து-பசிபிக் பிராந்தியத்திற்கான அதன் முன்னுரிமைகள் மற்றும் பார்வையை பட்டியலிடுவதற்கான ஒரு விரிவான மூலோபாயத்தை கடந்த ஏப்ரலில் முன்வைத்திருக்கிறது. இது உலகின் பொருளாதார மற்றும் மூலோபாய ஈர்ப்பு மையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...