ஓராண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் நடைபெற்ற கான் திரைப்பட விழா

கான் (Cannes) திரைப்பட விழாவில் Titane எனும் பிரஞ்சுத் திரைப்படம் முதல் பரிசை வென்றுள்ளது.

அந்த விருதின் விவரங்கள் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே வெளியிடப்பட்டன.

எனினும், தொடர் கொலை பற்றிய மிகவும் கற்பனை வாய்ந்த Titane திரைப்படம் முதல் பரிசைப் பெற்றது உறுதியாகியுள்ளது.

அந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜூலியா டோகோர்னோ (Julia Ducournau)

விருதைப் பெறும் இரண்டாவது பெண் இயக்குநர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

நோய்ப்பரவலால் கடந்த ஆண்டு இரத்து செய்யப்பட்ட கான் திரைப்பட விழா பல பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுக்கு இடையே மீண்டும் பிரஞ்சு ரிவியாராவுக்குத் திரும்பியுள்ளது.

அதில் கலந்துகொண்ட அனைவரும் 48 மணிநேரத்திற்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.கேளிக்கை நிகழ்ச்சிகளும் குறைக்கப்பட்டன.

விழாவின்போது பெரிய அளவில் நோய்த்தொற்று ஏதும் நேர்ந்ததாய்த் தெரியவில்லை.


Add new comment

Or log in with...