எவோட்ஸ் 2021 சிறுகதைப் போட்டி

கலை, இலக்கியத்துறைகளில் இளம் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2021 கலை, கலாசாரப் போட்டித் தொடரின் ஜூலை மாதத்துக்கான போட்டியாக புதிய அலை கலை வட்டத்தின் சர்வதேச இணைப்பாளர் டன்ஸ்டன்மணியின் தாயார் திருமதி ஜெயமணி ஞாபகார்த்தப் போட்டியாக சிறுகதை எழுதும் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் வருமாறு

1) தமக்கு விருப்பமான கருப்பொருளில் கதைகளை எழுதலாம்.

2) ஒருவர் ஒரு சிறுகதைப் பிரதியை மட்டுமே அனுப்பவேண்டும். இந்தச் சிறுகதை முன்னர் எத்தகைய ஊடகங்களிலும் வெளிவந்தவையாக இருக்கக்கூடாது.

3) ஒவ்வொரு சிறுகதையும் 500 சொற்களுக்குக் குறையாமலும்,800 சொற்களுக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்.

4) அனுப்படும் சிறுகதைப் பிரதியுடன், சொந்தபெயர், புனைப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள், வங்கி கணக்கு இலக்கம் போன்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

5) சிறுகதைப் பிரதிகள் கட்டாயம் பாமினி பொன்டில் ரைப் செய்து எதிர்வரும் 31.07.2021க்குள் எமக்கு கிடைக்ககூடியதாக பதிவிடவேண்டும்

6) பதிவிடும் எமது வலைத்தளங்களின் விபரங்கள் வருமாறு முகப்புத்தகம் வாயிலாக puthiyaalaikalaivaddam என்ற பக்கத்தின் மூலமாகவும் puthiyaalai என்ற வட்சப் குறுப் மூலமாகவும் மற்றும் [email protected] என்ற இமெயில் முகவரியூடாகவும் அனுப்பி வைக்கமுடியும்.

7) வயதெல்லை கிடையாது

8) நடுவர்களின் முடிவே இறுதியானது.

பரிசுகளுக்காக மூன்று ஆக்கங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படும். அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு:-

அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு

முதல்பரிசு :- 5000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்.

இரண்டாம் பரிசு :- 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

மூன்றாம் பரிசு :- 2000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

மேலதிக விபரங்களுக்கு:- 0776274099, 0777412604, 0753877163 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


There is 1 Comment

respected sir, have you announced the result?

Add new comment

Or log in with...