பல்கலைக்கழக சட்டத்துக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம்

அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதை ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிப்போமென ஐக்கி மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அறிக்கையில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம் 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கேடட் அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாகவும், இலங்கையில் உயர் கல்வி கற்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள விதத்தில் பராமரிப்பதற்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இன்னும் நவீன மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்குவதற்கும் தேவையான அந்த முடிவுக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் நாங்கள் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறோம். இருப்பினும், முன்மொழியப்பட்ட கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மூலம்,இலவச கல்வி கட்டமைப்பிற்கும் இந்த நாட்டில் அதன் இருப்புக்கும் ஒரு மோசமான பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

எனவே, உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...