குடு கடத்தல் மன்னன் தங்கல்ல பேபி கைது | தினகரன்

குடு கடத்தல் மன்னன் தங்கல்ல பேபி கைது

மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

குடு கடத்தல் மன்னன் தங்கல்ல பேபி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் தென் பகுதியைக் குறிவைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள்    கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, தங்கல்லை பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'தங்கல்லே பப்பி' எனப்படும் படகோட்டியே கைது செய்யப்பட்டவராவார்.

குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலை கடல்வழியாக முன்னெடுத்துள்ளாதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...