பிரபல சூப்பர் மாரியோ விளையாட்டு கார்ட்ரிட்ஜ் 1.5 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி உலக சாதனை

முதல்முறையாக விளையாட்டுக் கார்ட்ரிட்ஜ் (cartridge) ஒன்று 1.5 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

Nintendo நிறுவனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்று சூப்பர் மாரியோ. அதன் விளையாட்டுக் கார்ட்ரிட்ஜ் 1.56 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி, உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சூப்பர் மாரியோ விளையாட்டில், கடத்தப்பட்டிருக்கும் இளவரசியைக் காப்பாற்றுவது இலக்கு. செல்லும் வழியில் உள்ள தடைகளைத் தகர்த்துச் சவால்களைச் சமாளித்து இறுதிக் கட்டத்தை அடைவதில் விளையாட்டாளர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

இரண்டு நாள்களுக்கு முன்னர் அதே நிறுவனத்தின் இன்னொரு விளையாட்டுக் கருவி 870,000 டொலருக்கு விற்பனையாகியது.

டொலஸில் உள்ள Heritage Auctions எனும் நிறுவனம் ஏலத்தைக் கையாண்டது. இரண்டு பொருள்களையும் ஏலத்தில் வாங்கியவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னர் 1986ஆம் ஆண்டு, சூப்பர் மாரியோ விளையாட்டுக் கார்ட்ரிட்ஜ் 660,000 டொலருக்கு விற்பனையானது.

பழைய பொருள்களைச் சேகரிக்கும் பொழுதுபோக்கு கொண்டவர்களிடையே சூப்பர் மாரியோ போன்ற அந்தக்கால வீடியோ விளையாட்டுகள் அண்மை ஆண்டுகளாகப் பிரபலமடைந்துள்ளன.


Add new comment

Or log in with...