விரைவிலேயே நடக்கப் போகிறதாமே நயன்−சிவன் டும் டும் டும்! | தினகரன்

விரைவிலேயே நடக்கப் போகிறதாமே நயன்−சிவன் டும் டும் டும்!

இயக்குநர்  விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சம்மதம்  தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் அவர் புதுப்படங்களில் கமிட்டாகி வருகிறார்.

புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிவ் இன் முறைப்படி சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமணம் என்று அவ்வப்போது தகவல் வெளியாவது வழக்கமாகிவிட்டது.

நயன்தாராவை திருமதியாக பார்க்க அவரின் ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின்  தந்தைக்கு உடல்நலம் சரியில்லையாம். அவர் தன் மகளை விரைவில் திருமணக்  கோலத்தில் பார்க்க ஆசைப்படுகிறாராம். அந்த ஆசையை நயன்தாராவிடம் கூற அவரும்,  தன் அப்பாவுக்ககாக ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக  இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த விக்னேஷ் சிவனிடம் திருமணம் குறித்து ரசிகர்கள்  கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவரோ, திருமணத்திற்கு நிறைய செலவாகும்,  பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அதற்கும் முன்பு அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, காதல் போர் அடிக்கும்போது நானும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.

திருமண  பேச்சு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கமோ அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க  ஒப்புக் கொண்டு வருகிறார் நயன்தாரா. எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்  பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டிருக்கிறார் நயன்தாரா.

அதில் ஒரு படத்தை வடிவேலுவின்  எலி படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் திரிவிக்ரம்  ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர்த்து சிறுத்தை சிவா இயக்கத்தில்  அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் அல்போன்ஸ் புத்ரனின்  பாட்டு மலையாள படத்தில் நடிக்கிறார். தன் காதலரின் இயக்கத்தில் விஜய்  சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...