பாகிஸ்தான் படைகள் பங்களாதேஷில் நடத்திய இனப்படுகொலையை ஐ.நா அங்கீகரிக்க வேண்டும்

- நாடு கடத்தப்பட்ட காஷ்மீர் தலைவர்

பங்களாதேஷின் 1971 சுதந்திரப் போரின்போது பாகிஸ்தானின் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையையும் பிற சர்வதேச நிறுவனங்களையும் நாடுகடத்தப்பட்ட காஷ்மீர் தலைவர் சர்தார் ஷகத் அலி காஷ்மீரி, வலியுறுத்தியுள்ளார் . போர்க்குற்றத்திற்கு மன்னிப்பு கேட்க இஸ்லாமாபாத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் (யுகேபிஎன்பி) தலைவர் ஷவ்கத் அலி, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு வெளியே பங்களாதேஷ் சமூகத்தினரால் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தின் போது உரையாற்றினார்.

1971ஆம் ஆண்டு இனப்படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் கவலையை வெளிப்படுத்தினார், அதில் பாகிஸ்தான் இராணுவம் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது வங்காள கிளர்ச்சியை நசுக்குவதற்காக தாக்குதலை நடத்தியது.

பலகைகள் மற்றும் பதாகைகளை வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை அங்கீகரிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். '1971 இன் பங்களாதேஷ் இனப்படுகொலையை அங்கீகரிக்கவும்'.

'பங்களாதேஷ் இனப்படுகொலை, 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், 200 ஆயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் மற்றும் 10 மில்லியன் அகதிகள்' என பதாகைகளில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் இராணுவமே வங்காளத்தின் பல சுதந்திர போராளிகளைக் கொன்றது மற்றும் இனப்படுகொலை செய்தது" என்று ஷவ்கத் அலி கூறினார்.

"1971ஆம் ஆண்டு யுத்தக் குற்றங்கள் மற்றும் பங்களாதேஷ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து சர்வதேச நிறுவனங்களையும் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மன்னிப்பு கேட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடமளிக்கவும் பாகிஸ்தானைக் கோர வேண்டும்'' என்று அவர் மேலும் கூறினார்.


Add new comment

Or log in with...