ஒலிம்பிக் ஆரம்ப விழாவை மிக முக்கியமான பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த ஏற்பாடு | தினகரன்

ஒலிம்பிக் ஆரம்ப விழாவை மிக முக்கியமான பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த ஏற்பாடு

டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்ப விழாவைக் குறைந்த எண்ணிக்கையிலான முக்கிய பிரமுகர்கள் எனும் மிக முக்கியமான பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த ஜப்பானிய அரசாங்கம் ஏற்பாடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்குப் பிறகு உள்ள இரவு நிகழ்வுகள் ஆகியவை பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும்.

அதே நேரத்தில் தொடக்க விழாவில் பங்குபெறவுள்ள ஆதரவாளர்கள், அரசதந்திரிகள் உள்ளிட்ட முக்கியமானவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டது.

முன்பு, சுமார் 10,000 பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என்று மதிப்பிடப்பட்டது.

ஜூலை 23ஆம் திகதி தொடங்கவுள்ள போட்டிகளுக்கு உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கில் வருகையளிப்பவர்களால் மற்றொரு கட்ட கிருமிப்பரவல் ஏற்படுமோ என்ற கவலை நிலவுகிறது.

 


Add new comment

Or log in with...